Tuesday, June 23, 2009

Our goal in Life

அலைகள் மோதிடும் ஆர்ட்டலை கண்டேன்
வலைவீசி மீன்பிடிக்கும் வண்ணமும் கண்டேன்
உலைவைத்து உணவு படைக்கும் உண்மையை கண்டாயா
இலையிலிருந்து இன்பமாய் உண்டிடும் பண்டங்கள் தோன்றியது
மலைமாருதக்கண்ணன் மணிவண்ணன் அருளாலன்ரோ
கலைகளெல்லாம் பயின்று கற்பனைகள் தீட்டியும்
ஓலைகளிளிருக்கும் உன்னத காவியம் கண்டும்
ஆலைகளில் உழைத்திடும் ஏழைகளின் நிலையை உணர்ந்தோமா
வேலையின்றி வேதனையில் தவித்திடும் மானிடர் கணக்கிலார்
சாலைஒரங்களில் பிச்சை எடுக்கும் பாவங்கள் எத்தனை
காலையும் மாலையும் இவற்றை எண்ணி உள்ளத்தில் உன்னிடுவோம்
பாலைவனம் சென்று பசியினில் வாடினால் இதன் உண்மை புரியும்
வேலைஎந்தி நம்மைகாத்திடும் கந்தனைபாடிடுவோம்
வேலனின் வேலை எண்ணுவதைவிட நமக்கு வேறென்ன வேலை
காலனை உதைத்திட்ட மகேசன் சூலம்யேந்தி வந்திடுவான்
மண்ணும் விண்ணும் காத்திடும் திருமாலும் நம்முள் தோன்றிடுவான்

No comments: