Tuesday, June 23, 2009

God is always with us

இனிப்பதெல்லாம் தின்பண்டம் என்றுஎன்னாதே
இனிமையை வாழ்க்கையில் தேடிடும் மானிடரே
இன்னா சொல்லாமை இனிமை பயக்கும் இதயம் குளிரும்
இன்பமே வேண்டும் என்றாலும் துன்பமும் சகிக்கவெண்டும்
இன்பதுன்பம் நாணயத்தின் இருபக்கம் அல்லவா
இனிய வாக்கு சொல்லுவோம் இரக்கம் மனதில் கொள்ளுவோம்
இனியாவது மனிதவாழ்வு அனைவரையும் மதித்தல் என்று உணர்வோம்
தனித்து உலகில் தோன்றினாலும் தனிமை மிகக்கடினம்
அனைத்துலகையும் படைத்த இறைவன் அன்பையே பொழிகிறான்
அன்பர்களோடு பழகுவோம் அண்ணன் அண்ணி என்று எண்ணுவோம்
துன்பமெலாம் மறைந்து விடும் துயரமும் நீங்கிவிடும்
கண்ணன் கருணை திண்ணமாய் கிட்டிடும் ஐயமில்லை
ஓம் குருவயூரப்பா சரணம் ஓம் ஓம் ஓம்

No comments: